This Article is From Nov 02, 2018

டெல்லியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியர் சுட்டுக்கொலை!

இதுதொடர்பாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் மன்ஜித்(38) உயிரிழந்தவரின் கணவர், அவரது காதலி ஏஞ்சல் குப்தா என்ற பிரபா (26) மற்றும் ராஜிவ்(40)

டெல்லியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியர் சுட்டுக்கொலை!

இக்கொலையுடன் தொடர்புடைய ஏஞ்சல் குப்தா உட்பட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்

New Delhi:

38 வயதான பள்ளி ஆசிரியரை கொலை செய்ததற்காக அவரது கணவர், காதலி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு டெல்லியின் பவனா பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் மன்ஜித்(38) உயிரிழந்தவரின் கணவர், அவரது காதலி ஏஞ்சல் குப்தா என்ற பிரபா (26) மற்றும் ராஜிவ்(40).

மன்ஜித் மனைவி சுனிதாவின் எதிர்ப்பையும் மீறி ஏஞ்சலுடன் பழகி வந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்ததாக, உதவி காவல் ஆய்வாளார் ராஜ்னிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

திங்களன்று காலை பள்ளிக்குச் சென்ற சுனிதா மர்ம நபர்களால் சுடப்பட்டு இறந்தார். மூன்று முறை சுடப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் கூறினர். சுனிதாவிற்கு 16 வயதில் மகளும் 8 வயதில் மகனும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

.