உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
Sitapur, Uttar Pradesh: உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் முன்பாக பீடி குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிதாப்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. வீடியோவை பார்த்தவர்கள் ஆசிரியரை சரமாரியாக திட்டி கமென்ட் செய்துள்ளனர். இது மென்மேலும் பரவி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, பீடி குடித்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும், இவ்வாறு ஒழுங்கீனமாகநடந்து கொள்ளக் கூடாது என்றும் உத்தரப்பிரதேச அரசு கண்டித்துள்ளது.