This Article is From Oct 17, 2018

அறுவடை கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கான முயற்சியில் பஞ்சாப் அரசு - ஆசிரியர்கள் அதிருப்தி

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள், கிராம மக்கள் அறுவடை கழிவுகளை எரிக்கிறார்கள் என்பதை குறித்து ஆய்வுசெய்யும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்

அறுவடை கழிவுகளை எரிப்பதை தடுப்பதற்கான முயற்சியில் பஞ்சாப் அரசு - ஆசிரியர்கள் அதிருப்தி

பஞ்சாப் அரசாங்கம், அறுவடை கழிவுகளை எரிக்கப்படுவதை தவிர்க்க, விவசாயம் நடைபெறும் கிராமங்களில் நோடல் அதிகாரிகளை நியமித்துள்ளது.

Chandigarh:

குருதாஸ்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அறுவடை கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டினை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவினை திரும்பப் பெறும்படி ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குருதாஸ்பூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் மத்தியில் அறுவடை கழிவுகளை எரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரியர்களை நோடல் அதிகாரிகளாக நியமித்துள்ளது. இந்த உத்தரவிணை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆசிரியர்கள் வசிக்கும் இடம் மற்றும் பள்ளிகளிலிருந்து நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இடம் மிகத் தொலைவில் இருப்பதால் ஆசிரியப் பணி பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து பேசிய குருதாஸ்பூர் மாவட்ட ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஹர்ஜிந்தர் சிங் அளித்த பேட்டியில், அறுவடை கழிவுகள் எரிக்கப்படும் கிராமங்களில் ஆசிரியர்கள் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது ஆசிரியர்களின் பணியல்ல. ஆசிரியர்கள் நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள், அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் பள்ளியிலிருந்து 50லிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது.

தினமும் அவர்கள் 60 கிமீ பயணிப்பது சாதாரண விஷயமல்ல. மேலும், அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே ஆசிரியர்களை நோடல் அதிகாரியாக நியமித்த ஆணையை திரும்ப பெற வேண்டுமென்று கூறியுள்ளார்.

.