தமிழக அரசின் நிதி நிலைமை சரியில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஹைலைட்ஸ்
- கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது
- நிதிச்சுமை காரணமாக கோரிக்கைகளை ஏற்க முடியாது
- நிதி நெருக்கடி சமயத்திலும் ரூ. 14,000 கோடி சலுகைகளை வழங்கினோம்
9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று தமிழக மீன் வளத்துறை ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அரசின் நிதி நிலைமையை சுட்டிக் காட்டியுள்ள ஜெயக்குமார் தற்போதுள்ள சூழலில் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்பது சாத்தியம் அல்ல என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது. ஆனால் நிதிநிலைமை மோசமாக உள்ளதால் நடைமுறையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவது சாத்தியம் அல்ல.
நிதி நெருக்கடி கடுமையாக இருந்தபோதிலும், அரசு ஊழியர்களுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டன. நிதி நிலைமை சீரடையும் சூழலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும்.
தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். அதுதான் சமுதாய கடமை.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
மேலும் படிக்க - "அரசு ஊழியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்"