This Article is From Jan 30, 2019

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்!

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 9வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இனி பணிக்கு திரும்பி வர அவகாசம் கொடுக்கப்படாது என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், இன்னும் சில நாட்களில் செய்முறைத் தேர்வுகளும், இன்னும் சில வாரங்களில் எழுத்துத் தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில், போராட்டம் நீடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அதனால் மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

Advertisement

இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement