This Article is From May 10, 2019

புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு ஒடிசாவிற்கு வந்தடைந்தது

ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. தென்னை மற்றும் மாமரம் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டன

புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு ஒடிசாவிற்கு வந்தடைந்தது

மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 1,00,000 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. (Reuters)

New Delhi:

ஒடிசாவில் ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட  வேளாண் மற்றும் தோட்டப் பகுதிகளை பார்வையிட மத்திய அரசின் குழு ஒடிசா வந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். 

“ஒடிசாவின் ஃபனி புயலின் சேதத்தை அளவிட மத்திய குழு வந்துள்ளது. ஒருநாள் அல்லது இரண்டு நாள் தங்கி சேதத்தை அளவிட்டு அதன்படி நிவாரணம் நிர்ணயிக்கப்படும்” என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்பு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களை ஃபனி புயல் தாக்கியது. தென்னை மற்றும் மாமரம் ஆகியவை வேரோடு பிடுங்கப்பட்டன. கரையோரப் பகுதிகள் மற்றும் அங்குள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 

மாநில அரசின் ஆரம்ப மதிப்பீட்டின் படி, புயல் காரணமாக ஒடிசாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பயிர் சேதமடைந்துள்ளதாக ரிப்போர்ட் தெரிவிக்கிறது. மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 1,00,000 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை இந்த இரண்டு மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமில்லை. 

.