Read in English हिंदी में पढ़ें
This Article is From Jul 15, 2018

குழந்தை கடத்தல் வதந்தி: இளைஞர்களை தாக்கிய கிராம மக்கள்; ஒருவர் பலி

குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த இளைஞரை, கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி, பிடார் பகுதி மக்கள் தாக்கியுள்ளனர்

Advertisement
தெற்கு ,
Bidar, Karnataka:

பிடார், கர்நாடகா: குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த இளைஞரை, கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி, பிடார் பகுதி மக்கள் மோசமாக தாக்கியுள்ளனர்.

ஹைதரபாத்தை சேர்ந்த மொஹமத் அசாம், பஷீர், சல்மான், அக்ரம் ஆகிய நான்கு இளைஞர்கள் காரில் சென்றுள்ளனர். கர்நாடக மாநிலம், பிடார் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். சாலை ஓர பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கு சாக்லெட்டுகலள் அளித்ததாக காவல் துறை விசாரனையில் தெரியவந்துள்ளது.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் கடத்தல் கும்பல் குறித்த தகவல்களை வைத்து, குழந்தைகளை கடத்தி செல்ல சாக்குலேட்டுகள் கொடுப்பதாக கிராம மக்கள் கருதியுள்ளனர். இதனால், கிராம மக்கள் இளைஞர்களை தாக்கியுள்ளனர்.

தப்பித்து செல்ல முயன்ற இளைஞர்களின் வாகனம், விபத்துக்குள்ளானது. இரு சக்கர வாகனங்களில் அவர்களை பின் தொடர்ந்து துரத்தி சென்ற கிராம மக்கள், இளைஞர்களை மீண்டும் தாக்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி அடித்ததுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைவதற்குள், மொஹமத் ஆசாம் என்ற இளைஞர் உயிரிழந்ததாக என்று தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து, சந்தேகத்திற்குரிய 32 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில், குழந்தை கடத்தல் குறித்த போலி செய்திகளை பகிர்ந்த வாட்ஸ் அப் அட்மினும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement