This Article is From Jul 12, 2020

கடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை! 19 வயது இளைஞன் கைது!!

வங்கி செயல்முறைகள் குறித்த அவரது சிறந்த புரிதல் இருந்தபோதிலும் சந்தேகத்திற்கிடமான நோக்கத்தின் பேரில், அவர் அளித்த பல பதில்கள் புரிந்துகொள்ள முடியாதவை, குழந்தைத்தனமானவை, விசித்திரமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடலூரில் போலி எஸ்பிஐ வங்கிக் கிளை! 19 வயது இளைஞன் கைது!!

மோசடி மற்றும் கள்ள முத்திரைகள் வைத்திருந்ததற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • போலி எஸ்பிஐ வங்கி தொடர்பாக காவல்துறை 19 வயது இளைஞனை கைது செய்துள்ளது.
  • ஓய்வுபெற்ற எஸ்பிஐ ஊழியர்களின் மகன் இந்த நபர்
  • பண மோசடியில் ஈடுபட்டு அவர்கள் மக்களை ஏமாற்றியதாக புகார்கள் இல்லை
Tamil Nadu:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் பாதிப்பில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், கடலூர் அருகே உள்ள பண்ருட்டியில் போலி எஸ்பிஐ வங்கி கிளையை திறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை 19 வயது இளைஞனை கைது செய்துள்ளது.

ஓய்வுபெற்ற எஸ்பிஐ ஊழியர்களின் மகனான இந்த நபர், தான் வசித்துவந்த வீட்டின் மேல் தளத்தில், வங்கி கிளைக்கு தேவையான போலி முத்திரைகள் மற்றும் சல்லான்களை தயார் செய்திருந்தார். மேலும் "வங்கிக் கிளையை நடத்துவதற்கு" தேவையான பணம் எண்ணும் இயந்திரம் போன்ற பிற சாதனங்களையும் வைத்திருந்திருக்கிறார்.

கிளைக்கான அடையாளமாக எவ்வித போர்டையும் அவர் வைத்திருக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்த கிளைக்கு வருகை தந்த நபர்கள் இது குறித்து எஸ்பிஐ தலைமையகத்தில் விசாரித்ததைத் தொடர்ந்து இந்த மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பின்னர் பண்ருட்டி எஸ்பிஐ வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையின் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சல்லான்களை அச்சிட்ட ஒரு அச்சுப்பொறியும், போலி முத்திரைகள் தயாரித்த மற்றொருவரும் இதே போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

பண மோசடியில் ஈடுபட்டு அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டார்களா என்கிற கேள்விக்கு, "இல்லை..இது போன்ற புகார் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை" என பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞனின் தந்தை எஸ்பிஐ ஓய்வு பெற்ற ஊழியர். தற்போது அவர் உயிருடன் இல்லை. மேலும், அவரின் தாய் சமீபத்தில் எஸ்பிஐ வங்கியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில் அவர் வங்கியில் பணிபுரிய விரும்புவதாகவும், நீண்ட காலமாக வங்கி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்திருந்ததால், அவர் அதைப் பற்றி "மிகவும் அறிவார்ந்தவர்" என்றும் தெரியவந்தது.

வங்கி செயல்முறைகள் குறித்த அவரது சிறந்த புரிதல் இருந்தபோதிலும் சந்தேகத்திற்கிடமான நோக்கத்தின் பேரில், அவர் அளித்த பல பதில்கள் புரிந்துகொள்ள முடியாதவை, குழந்தைத்தனமானவை, விசித்திரமானவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

"(எஸ்.பி.ஐ) கிளையைத் திறக்க மும்பையிலிருந்து ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும், அவர் ஒரு அடையாள பலகையை அமைக்கப் போவதாகவும் அவர் அமைதியாக எங்களிடம் கூறினார்," என்று இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

.