Read in English
This Article is From Jan 04, 2019

நார்வேயில் திருட சென்ற இடத்தில் போலீஸை உதவிக்கு அழைத்த இளைஞர்

திருட சென்ற இடத்தில், காருக்குள் மாட்டிக்கொண்ட திருடன் போலீஸை உதவிக்கு அழைத்த சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது.

Advertisement
விசித்திரம்

திருட சென்ற காருக்குள் மாட்டி கொண்ட இளைஞர்

திருட சென்ற இடத்தில், காருக்குள் மாட்டிக்கொண்ட திருடன் காவல் அதிகாரிகளை உதவிக்கு அழைத்த சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது.

நார்வேவில் உள்ள ட்ரோந்தேலாக் என்னும் இடத்தில் தான் இது நடந்துள்ளது.

காலை 8 மணியளவில் 17 வயதான இளைஞரிடம் இருந்து காருக்குள் மாட்டிக் கொண்டதால், தன்னை காப்பாற்றும் படி அழைப்பு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

'டீலர்ஷிப்பில் இருந்து காரை திருட சென்ற அந்த இளைஞர், காரில் இருந்து வெளியேவர இயலாததால், போலீஸாரை உதவிக்கு அழைத்துள்ளார். அந்த போலீஸ்காரர்கள் இளைஞர்க்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால், அவர்கள் உதவுவார்கள் என எண்ணியுள்ளார்' என  ட்ரோந்தேலாக் காவல்துறையை சேர்ந்த எப்பி கிமோ தெரிவித்தார்.

மேலும் நாங்கள் அவரது நண்பரை போல் அவரை மீட்போம் என அந்த இளைஞர் எண்ணியுள்ளார் என அந்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

அந்த இளைஞரை போலீஸார், விசாரித்து பின் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement