உத்திர பிரதேசத்தில் இருக்கும் பில்கான் கிராமத்தில் தனது பேரன், போனை திருடியதாக சந்தேகப்பட்ட தாத்தா, அவரை அடித்துக் கொன்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாசாகர் என்ற 15 வயது சிறுவனை, அவரின் தாத்தா ராம் சுரேஷ் போனை திருடியதாக சந்தேகப்பட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், தயாசாகர் இறந்துவிட்டார் என்று கூறுகிறது உள்ளூர் போலீஸ் தரப்பு.
இந்த விவகாரம் தொடர்பாக தயாசாகரின் தாய், காவல் துறையிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் ராம் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, திருடப்பட்டதாக சொல்லப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)