சீனாவில் உள்ள ஃசியாமென் (Xiamen) மாகாணத்தைச் சேர்ந்தவர் கூயி ஜியான்யூ (Que Jianyu). தனது சவால்களை முடிக்கும் திறனைக்கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் கூயி, கடந்த வியாழக்கிழமை தன்னுடைய கைகள் மற்றும் கால்களைக் கொண்டு மூன்று ரூபிக்ஸ் க்யூப்களை முடித்து கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த இளைஞர் ஏற்கனவே மூன்று ரூபிக்ஸ் க்யூப்களை ஜஃக்கீளிங் (juggling) செய்துகொண்டே முடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், கின்னஸ் உலக சாதனை பதிவுகள் படி இந்த 13 வயது இளைஞன் தனது சாதனையை 1 நிமிடம் 36.39 நொடிகளில் முடித்து, குறைந்த சமையத்தில் தனது கை, கால்களை கொண்டு ரூபிக்ஸ் க்யூப்களை தீர்த்த சாதனைப் படைத்துள்ளார். பின்னர் அதே இளைஞன் அச்சாதனையை 15.84 நொடிகளில் முடித்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.
மூன்று ரூபிக்ஸ் க்யூப்களை முடிக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை கடந்த வியாழக்கிழமையன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. அந்த வீடியோ பதிவுக்கு சுமார் 40,000 நபர்கள் பார்த்து, தங்களது பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோவுக்கு வந்த பல கமென்டுகளில் “இது எப்படி சாத்தியம்?” எனவும், “அக்குழந்தை ஒரு மேதை” என பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
தனது 6 வயது முதல் ரூபிக்ஸ் க்யூப்களை விளையாடிவரும் கூயி, இந்தக் க்யூப்களை கொண்டு விளையாடுவதால் தன்னுடைய சிந்தனை திறன் மாறுபடுவதாகவும், இதன் மூலம் தனக்கு அதிக நண்பர்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
‘'முதலில் நான் ஃபார்முலாக்கள் மூலம்தான் க்யூப்களை செய்து முடிக்கும் திறனைக் கற்றுக்கொண்டேன். பல மில்லியன் முறை பயிற்சிக்கு பின் எல்லா ஃபார்முலாக்களும் பரிட்டசயம் ஆகிப் பின்னர் எனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வேன்'' என கூயி ஜியான்யூ தெரிவித்துள்ளார்.
Click for more
trending news