Read in English
This Article is From May 19, 2020

லாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி!

ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் கார்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி

Advertisement
Telangana Posted by

லாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி. (File)

Highlights

  • லாக்டவுன் 4.0: தெலுங்கானாவில் அரசு பேருந்துகள், சலூன்களுக்கு அனுமதி!
  • 3 பயணிகளுடன் கார்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி.
  • இரண்டு பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்குவதற்கும் அனுமதி.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே.31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கிற்கான நெறிமுறைகளை தெலுங்கானா அறிவித்துள்ளது. அதன்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பேருந்துகள் மற்றும் கால் டாக்சிகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரேசகர ராவ் கூறும்போது, தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கட்டுப்பாட்டுடன் வீட்டிலே இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

அதேபோல், மூத்த குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அனுமதி இல்லை. இதுவரை மக்கள் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறிய அவர், தற்போதிலிருந்தே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொரோனா வைரஸூடன் நாம் வாழப் பழகுவோம் என்று தெரிவித்துள்ளார். 

எதற்கெல்லாம் அனுமதி, அனுமதியில்லை:

  • தெலுங்கானா மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து பேருந்துகளும் இன்று காலை 6 மணி முதல் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  •  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் அதிக தொற்று பாதிப்புகள் உள்ளதால் அங்கிருந்து வரும் மக்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

  •  சமூக இடைவெளியை கடைபிடித்து சலூன்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் இ-காமர்ஸ் நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் அனுமதி.

  • ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் கார்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்க அனுமதி.

  • இரண்டு பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்குவதற்கும் அனுமதி. 

  • உடற்பயிற்சி மையங்கள், மெட்ரோ ரயில், நீச்சல் குளங்களுக்கு தடை நீடிக்கிறது.

  •  எந்தவித மத வழிபாட்டு தளங்களுக்கும் அனுமதி இல்லை.

  •  பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களுக்களை திறப்பதற்கும் அனுமதி இல்லை.

  •  எந்தவித பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி கிடையாது.

  • முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் இல்லையென்றால், ரூ.1000 அபராதம் என அரசு தெரிவித்துள்ளது.

  • அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீதம் செயல்படலாம். 

  • தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளும் முழுமையாக இயங்க அனுமதி.

Advertisement
Advertisement