This Article is From Oct 19, 2018

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா பாஜக விரைவில் வெளியிடுகிறது!

வேட்பாளர்களை தேர்வு செய்ய தெலுங்கானா பாஜக குழு தலைவர் கே.லட்சுமன் தலைமையிலான தேர்தல் கமிட்டி குழுவை உருவாக்கியுள்ளது

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா பாஜக விரைவில் வெளியிடுகிறது!

தெலுங்கானா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது

Hyderabad:

தெங்கானா சட்டசபை தேர்தலுக்கான, முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் ஒரிரு நாட்களில் வெளியிடப்படும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களை தேர்வு செய்ய தெலுங்கானா குழு தலைவர் கே.லட்சுமன் தலைமையிலான தேர்தல் கமிட்டி குழுவை உருவாக்கியுள்ளது.

பெரும்பாலும் நாங்கள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஒரிரு நாளில் அறிவித்துவிடுவோம். 25லிருந்து 30 பெயர்களை முதற்கட்டமாக வெளியிடுவோம் என நம்புகிறோம். எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம் ஆனால் கட்டாயம் வேட்பாளர்களை அறிவிப்போம் என சாகர் ராவ் பிடிஜ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிக்கும் 4லிருந்து 5 பேர் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜக தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

தெலுங்கானாவில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்கும் எண்ணமில்லை என பாஜக தலைவர் அமித்ஷா ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

.