This Article is From Nov 01, 2018

உணவு முதல் குளியல் வரை... தெலங்கானா தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள்!

டி.ஆர்.எஸ் கட்சியின் மஹபூப் நகர் வேட்பாளர் ஶ்ரீனிவாஸ் கௌட் வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்தையும் செய்ய தாயாராக உள்ளார்.

கட்சியின் சில வேட்பாளர்கள் குழந்தைகளும், சில முதியவர்களுக்கும் குளிப்பாட்டி வருகிறார்கள்

Hyderabad:

தெலங்கானாவில் ஓட்டுரிமை உள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு தலைமுடி திருத்தம், ஷேவ் செய்தல், உணவு, குழந்தை பராமரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் செய்ய தெலங்கானா வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். வேட்பாளர்கள் செய்துவரும் இந்த உதவிகள் கடந்த சில நாட்களாக ஃபோட்டோக்களாகவும் மற்றும் வீடியோக்களாகவும் வெளியிடப்பட்டு வருகிறது.

தெலங்கானா ராஷ்ட்ரி சமிதி கட்சியின் செங்காரெட்டி வேட்பாளரான சின்ட பிரபாகர் ஒரு வீடியோவில் மக்களுக்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு முதாட்டியைக் கட்டி பிடித்துகொண்டு ஆறுதல் கூறுவதோடு, அவரின் பென்ஷன் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார்.

தேர்தல் பிரசாரங்கள் இப்போது இலவசமாக முடி திருத்தம் மற்றும் ஷேவ் செய்யும் காலமாக மாறிவருகிறது. முடி திருத்தம் செய்பவர்கள், சித்திபெட் வேட்பாளர் ஹரிஷ் ராவிற்காக, வெளிப்படையாக தாங்கள் இலவசமாக ஹேர்கட் மற்றும் ஷேவ் செய்வதாக அறிவித்துள்ளனர .

ஒரு சில வேட்பாளர்கள், குழந்தைகள் மற்றும் சில முதியவர்களையும் குளிப்பாட்டி வருகிறார்கள். இதை ஒரு பிரச்சாரமாக முன் வைத்து, குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள்.

33kilanc

டி.ஆர்.எஸ் கட்சியின் மஹபூப் நகர் வேட்பாளர் ஶ்ரீனிவாஸ் கௌட் நடமாடும் உதவியாளராகவே மாறிவருகிறார். கட்டடம் கட்டுவது, துணிகள் அயன் செய்வது, தண்ணீர் இறைத்தல், அரிசி சுத்தம் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

ஒருபக்கம் வைரலாகிக் கொண்டிருக்கும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ் செய்தவை என்றும், இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் முஷிராபாத் வேட்பாளர் அனில் குமார் யாதவ் மக்களின் துணிகள் அயன் செய்வதும், தோசை ஊற்றுவதும் போன்ற புகைப்படங்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சலுகைகள் யாவும் டிசம்பர் 5-ம் தேதி வரை மட்டுமே மக்கள் பெற முடியும். பிரச்சாரத் தேதிகள் முடிந்த பின்னர் வேட்பாளர்கள் நிறுத்தி விடுவார்கள். டிசம்பர் 7-ம் தேதி தெலங்கானா தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தேர்தல் முடிவுகளுடன் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்படும்.

.