This Article is From Nov 15, 2018

‘நான் ரூ.20 கோடி சொத்து வைத்திருக்கும் விவசாயி’- தெலங்கானா முதல்வர் தகவல்

தெலங்கானா மாநிலத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது

ராவ், தான் ஒரு விவசாயி என்று தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்

Hyderabad:

தெலங்கானா மாநிலத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகளிடையே காரசார பிரசாரம் நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கஜவெல் தொகுதியிலிருந்து போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் ராவ். வேட்பு மனுவுடன் தனது சொத்து குறித்து விவரங்களையும் இணைத்துள்ளார் ராவ்.

அதில் அவர், ‘என் பெயரில் 10.40 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கின்றன. என் மனைவி சோபா பெயரிர் 10.45 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கின்றன.

அதேபோல, எனது பெயரில் 12.40 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள் இருக்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அசையா சொத்துகளில் 54 ஏக்கர் விவசாய நிலமும் அடக்கம். அதன் மதிப்பு மட்டும் 6.50 கோடி ரூபாய் ஆகும்.

ராவ், தான் ஒரு விவசாயி என்று தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். 2017 - 18 ஆண்டுகளில் தனது வருமானம் 2.07 கோடி ரூபாய் என்று ராவ் கூறியுள்ளார்.

மேலும், வைப்பு நிதியாக வங்கியில் தனக்கு 5.63 கோடி ரூபாய் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராவிற்கு, ஐதராபாத் மற்றும் கரீம்நகரில் இரண்டு வீடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சந்திரசேகர் ராவ், தனது மொத்த சொத்தின் மதிப்பு, 16.94 கோடி ரூபாய் என்று கூறியிருந்தார். 2012 - 13 ஆண்டில் தனது வருமானம் 6.59 லட்ச ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார்.

.