This Article is From Feb 27, 2020

சவப்பெட்டியில் பெண்ணின் உடல் - தந்தையை உதைத்த போலீஸ்காரர் : தெலுங்கானாவில் நடந்த மனதை உலுக்கும் சம்பவம்

காவலர்களைத் தடுக்க முற்படும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார்

அவ்வாறு நடந்துகொண்ட அந்த போலீஸ் அதிகாரி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
  • தற்போது NDTVக்கு பேட்டி அளித்துள்ள போலீஸ் அதிகாரி சந்தனா தீப்தி
  • தனியார் ஜூனியர் கல்லூரியில் பயின்று வந்த அந்த மாணவி
New Delhi:

கடந்த திங்கள்கிழமை அன்று தெலுங்கானாவில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துபோன 16 வயது கல்லூரி மாணவரின் உடலைக் கொண்டு செல்லும்போது, மகள் இறந்த துக்கத்திலிருந்த தந்தையை அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் தனது பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தில் தான் இந்த மனதை உலுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது . 

வெளியான இந்த வீடியோவில், ஒரு குழுவாக உள்ள காவல்துறையினர் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமா சாலையில் தள்ளிச்செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அவர்களைத் தடுக்க முற்படுகிறார் இறந்து அந்த சவப்பெட்டியில் உள்ள பெண்ணின் தந்தை. அவ்வாறு அவர் அந்த காவலர்களைத் தடுக்க முற்படும்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார். 

மனதை உருக்கும் இந்த சம்பவம் நடக்கும்போது, கீழே விழுந்த அந்த மனிதரைப் போலீசிடம் இருந்த காக்க அருகில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற சேலையில் நின்றிருந்த ஒரு பெண் ஓடி வருகிறார் (அந்த மனிதரின் மனைவியாகக் கருதப்படுகிறது). இந்நிலையில் தற்போது சங்க ரெட்டி மாவட்டத்தில் பொறுப்பில் இருக்கும் மேடக் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அவ்வாறு நடந்துகொண்ட அந்த போலீஸ் அதிகாரி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தற்போது NDTVக்கு பேட்டி அளித்துள்ள போலீஸ் அதிகாரி சந்தனா தீப்தி, அந்த பெண்ணின் குடும்பத்திரனுடன் வந்த சில ஆர்ப்பாட்டக்காரர்கள், உடலை போலீஸ் காவலிலிருந்து எடுக்க முயன்றதாகத் தெரிவித்தார். மேலும் "பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடலை போலீசார் எடுத்துச்செல்ல முயன்றபோதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார். தனியார் ஜூனியர் கல்லூரியில் பயின்று வந்த அந்த மாணவியின் இறப்பின் பின்னணி என்னவென்பது இதுவரை விளக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த பெண்ணின் உடல் அவர் பயின்று வந்த கல்லூரியின் சலவை செய்யும் அறையில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் தற்போது இந்த வழக்கு தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பதற்கு முந்தைய நாட்களில் சிறுமிக்கு அதிக காய்ச்சல் இருந்ததாகவும், மேலும் மன அழுத்தத்தால் அவள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர். 

பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அந்த பெண்ணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் சிறுமியின் இறுதிச் சடங்குகள் இன்னும் நடத்தப்படவில்லை.

.