This Article is From Nov 04, 2018

தெலங்கானா தேர்தல்: உவைசிக்கு எதிராக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்திய பாஜக

தெலங்கானா சட்டசபை தேர்தலில் மஜ்லிஸ் கட்சியின் அக்பருதீன் உவைசிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரை பாஜக நிறுத்தியுள்ளது

தெலங்கானா தேர்தல்: உவைசிக்கு எதிராக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்திய பாஜக

மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்க உழைப்பேன் என்கிறார் சையத் ஷாஸதி

Hyderabad:

தெலங்கானா தேர்தலில் மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த அக்பருதீன் உவைசி, அம்மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளர்களுள் ஒருவராக உள்ளார். இவருக்கு எதிராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தெலங்கானா மக்கள் மத்தியில் இருந்தது.

இந்த நிலையில், அக்பருதீன் போட்டியிடும் ஐதராபாத்தின் சந்திரயான்குட்டா தொகுதியில் அவரை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் சையத் ஷஸாதியை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.

பாஜக வேட்பாளரான ஷஸாதி, சந்திரயான்குட்டா தொகுதியில் வளர்ச்சி இல்லை, மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை, அவர்களின் வளர்ச்சிக்காக உவைசி என்ன செய்தார், எத்தனை பிள்ளைகளுக்கு கல்வி அளித்திருக்கிறார், எத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் என உவைசியை பார்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் பெற்ற அக்பருதீன் உவைசி கடந்த 1999,2004,2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வாக தற்போதும் உள்ளார்.

.