Read in English
This Article is From Nov 02, 2018

தெலங்கானா சட்டசபை தேர்தல் : வேட்பாளர்களின் 2-வது பட்டியலை வெளியிட்ட பாஜக

வேட்பாளர் பட்டியலை பாஜக-வின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று நடந்த கூட்டத்தின்போது இறுதி செய்துள்ளது. கூட்டத்திற்கு அமித் ஷா தலைமை வகித்தார்

Advertisement
இந்தியா

தெலங்கானாவில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்தார் அமித் ஷா.

Hyderabad:

தெலங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28 பேர் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையின் கீழ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்தான் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

தெலங்கானா சட்டசபை தேர்தல் பாஜக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. முன்னதாக கடந்த மாதம் 20-ம் தேதி பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தம் 38 பேர் இடம் பெற்றிருந்தனர்.

Advertisement

அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் சீட் கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Advertisement