This Article is From Nov 18, 2018

தெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

தற்போது வரைக்கும் தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் சார்பாக மொத்தம் 88 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா தேர்தல்: 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் மொத்தம் 94 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Hyderabad:

தெலங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 3-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு நடைபெறவுள்ள தேர்தலில், காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் டி.ஜே.எஸ். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 94 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 2 கட்டமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் 75 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், மேலும் 13 வேட்பாளர்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இத்துடன் காங்கிரஸ் தரப்பில் மொத்தம் 88 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் வரும் திங்களன்று தொடங்குகிறது.

.