டிடிபி, டிஜேஎஸ் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது.
Hyderabad: தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம்தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனப்படும் டி.ஆர்.எஸ். கட்சி ஒருபுறம் போட்டியிடுகிறது.
மறுபுறம் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சி தெலங்கு தேசம், தெலங்கானா ஜன சமிதி மற்றும இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களுக்கு குறைவில்லாமல் போட்டியிடும் என தெரிகிறது. இதேபோன்று தெலுங்கு தேச கட்சிக்கு 14 முதல் 18 சீட்டுகள் கிடைக்கும். மற்றொரு கூட்டணி கட்சியான டி.ஜே.எஸ். கட்சிக்கு 8 - 10 சீட்டுகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.