Telangana encounter: இந்த சம்பவம் பல்வேறு வகையில் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது
New Delhi: தன் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும் என்று கண்ணீர் மல்க தெலுங்கானா என்கவுண்டர் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த நவம்பர் 27-இல் தெலங்கானா மாநிலத்தில் 27 வயது கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுநர் நால்வர் பாலியல் பலாத்கரம் செய்து எரித்து கொலை செய்தனர். இந்த கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட நால்வரையும் காவல்துறை எண்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்திலேயே முகமது ஆரிஃப் (26), ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன் (20), சிந்தகுந்தா சென்னகேசவலு (20) ஆகிய 4 பேரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இன்று “என் மகளின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும். போலீஸாருக்கும் அரசாங்கத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.
இந்த சம்பவம் பல்வேறு வகையில் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தெலுங்கானா பொதுமக்கள் பலரும் வரவேற்றனர். வெடி வெடித்தும் இனிப்பு பகிர்ந்தும் கொண்டாடினர்.