தெலங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ் (FILE)
Siddipet (Telangana): தெலங்கானா அமைச்சர் ஹரிஷ் ராவ்க்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் நிதியமைச்சராக இருக்கும் ஹரிஷ் ராவ் கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அமைச்சர் ஹரிஷ் ராவ்க்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் ஹரிஷ் ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும், நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக தன்னைச் சந்தித்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.
தெலங்கானாவில் செப்டம்பர் 4 ஆம் தேதி மட்டும் புதிதாக 2,511 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் இதுவரையில் மொத்தம் 877 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.1,04,603 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர், தற்போது 32,915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25,729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)