This Article is From Nov 22, 2018

தெலங்கானா அரசியல் : காங்கிரஸ் கட்சியில் விஷ்வேஷ்வர் ரெட்டி

முதல்வர் சந்திரசேகர ராவின் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேரவுள்ளார் விஷ்வேஷ்வர் ரெட்டி

தெலங்கானா அரசியல் : காங்கிரஸ் கட்சியில் விஷ்வேஷ்வர் ரெட்டி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விஷ்வேஷ்வர் ரெட்டி சந்தித்த காட்சி.

New Delhi:

தெலங்கானா அரசியலில் முக்கிய புள்ளியாக விளங்கியவரும் மகா கோடீஸ்வரருமான விஷ்வேஷ்வர் ரெட்டி நேற்று ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த அவர், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

டெல்லியில் ராகுல் காந்தியை இன்று சந்தித்தபோது காங்கிரசில் சேர்வது தொடர்பான தனது விருப்பத்தை அவரிடம் விஷ்வேஷ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார். வரும் 23-ம்தேதி மெட்சல் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது. இதில் சோனியா காந்தி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் விஷ்வேஷ்வர் கட்சியில் இணைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்வேஷ்வர் ரெட்டி, அப்போலோ மருத்துவமனையின் நிறுவனர் பிரதாப் சி. ரெட்டியின் மருமகன். இவரின் மனைவி சங்கீதா ரெட்டி, அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். என்ஞ்னியராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஷ்வேஷ்வர் கடந்த 2013-ல் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்தார்.

அவரது தாத்தா கொண்டா வெங்கட ரங்கா ரெட்டி சுதந்திர போராட்ட வீரர். பின்னாளில் அவர் ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து விஷ்வேஷ்வர் ரெட்டி விலகியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

.