বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 02, 2019

பெண் மருத்துவர் கொலை: வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனர்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினரின் ரிமாண்ட் அறிக்கையில், எப்படி இந்த வன்கொடுமை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்த மனதை ஊலுக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisement
இந்தியா Edited by
Hyderabad:

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள இந்த விவகாரம் தொடர்பான போலீசாரின் விசாரணை தகவல் ஆவணங்கள் என்டிடிக்கு கிடைத்துள்ளன. அதன்படி, அந்த பெண் மருத்துவர் மாலை 6.15 மணி அளவில் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது பணிக்காக கால்டாக்சியில் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்துவிட்டு அவர், வருகைக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, 9.15 மணி அளவில், தனது இருச்சக்கர வாகனத்தை எடுத்துள்ளார். அப்போது, இருச்சக்கர வாகனம் பஞ்சர் ஆகியுள்ளதாக அந்த கும்பல் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தொடர்ந்து, அதிலிருந்து ஒருவரை அனுப்பி பஞ்சர் பார்த்து வர அனுப்பி உதவுவது போல் நடித்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை ஒதுக்குப்புறத்திற்கு இழுத்து வர முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து, இந்த பெண் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால், அவர் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி அமைதிப்படுத்த முயற்சித்துள்ளனர். 

பின்னர் அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றி நான்கு பேரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிய ஆரம்பிக்கவும் அந்த கும்பல் அவரை கொலை செய்து உடலை ஒரு போர்வையில் சுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, 2.30 மணி அளவில் பாலத்திற்கு அடியில் உடலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். 

Advertisement

இதனிடையே, பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் இரவு 10 மணி அளவிலே புகார் செய்த போதும், அவர்களை போலீசார் அலைக்கழிக்க வைத்துள்ளனர். மேலும், 3 மணி அளவிலே தேடும் பணியை தொடங்கியுள்ளனர். இது காவல்துறையினர் மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement