நான் சொல்வது எல்லாம்; நான் ஊழலுக்கு எதிரானவன் என்பதை மட்டுமே;
New Delhi: தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது அறையில் “நான் ஊழல்வாதியல்ல' என்று பெரிய அறிவிப்பு பலகை ஒன்றை மாட்டியுள்ளார். பல லஞ்ச சலுகைகள் வந்ததால்தான் இந்த நடவைக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று வடக்கு மின் விநியோக கழக லிமிடெட் அலுவலகத்தில் கூடுதல் பிரிவு பொறியாளர் போடெட்டி அசோக் தெரிவித்துள்ளார்.
சிவப்பு நிற பலகையில் “நான் லஞ்சம் வாங்கமாட்டேன்' என்றும் ஆங்கிலத்தில் நான் ஊழல்வாதியல்ல என்றும் அறிவிப்பு பலகையில் எழுதிவைத்துள்ளார். இது சுமார் 40 நாட்களுக்கு முன் மாட்டப்பட்டது எனவும் தற்போதுதான் சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது என்றும். தி ஹிந்து தெரிவித்துள்ளது.
போடெட்டி அசோக் கடந்த 14 ஆண்டுகளாக மின் துறையில் பணியாற்றி வருகிறார் என்று தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது. வேலையை முடிக்க மக்கள் பணம் கொடுப்பதால் மக்கள் கேளியும் செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
“எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் புதிய மக்கள் அலுவலகத்திற்கு வந்து லஞ்சம் தருகிறார்கள். நான் லஞ்சம் வாங்குவதில்லை என்று அதையே மீண்டும் மீண்டும் சொல்லி சோர்வாகி விட்டது. அதனால் கடைசியாக அவர்களின் சந்தேகங்களை தீர்க்க அறிவிப்பு பலகை மாட்டத் தீர்மானித்தேன்” என்று அசோக் தி நியூஸ் மினிட்ஸ்க்கு தெரிவித்தார்.
இந்த அறிவிப்பினால் சக ஊழியர்களிடமிருந்து மனக்கசப்புகள் ஏற்படுவதாகும் முழுத்துறையும் ஊழலில் உள்ளது என்றார்.
நான் சொல்வது எல்லாம்; நான் ஊழலுக்கு எதிரானவன் என்பதை மட்டுமே; மற்றவர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்று கூறவில்லை. இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அசோக் கூறினார்.
Click for more
trending news