வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பறக்கும் படையினர் தகவல் அளித்துள்ளனர்.
Hyderabad: தேர்தல் நடைபெறவுள்ள தெலங்கானா மாநிலத்தில் பெரும் அளவுள்ள பணத்தொகையை பறக்கும் படையினர் கைப்பற்றி உள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்வது தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் ரூ. 7.51 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பறக்கும் படையின் தலைவரான ஐதராபாத் போலீஸ் கமிஷ்னர் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.