Read in English
This Article is From Jun 06, 2019

தெலங்கானாவில் காங்கிரஸ் கூடாரம் கலைகிறது? - 12 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ திட்டம்!!

கட்சி எம்எல்ஏக்களை சந்திர சேகரராவ் விலைக்கு வாங்குவதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

தெலங்கான சட்டசபையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு மொத்தம் 88 உறுப்பினர்கள் உள்ளனர்.

Hyderabad:

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அங்கு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 

மக்களவை தேர்தலின்போது தென் மாநிலங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றவில்லை. 17 மக்களவை தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் அக்கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தெலங்கானாவில் பாஜக ஆதரவு அலை வீசியதால் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 

119 உறுப்பினர்களை கொண்ட தெலங்கானா சட்டசபையில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு மொத்தம் 88 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 18 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். 

இவர்களில் 12 பேர் டி.ஆர்.எஸ். கட்சிக்கு செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை மொத்த எம்எல்ஏக்களில் 3-ல் 2 பங்கு ஆகும். இதனால் அவர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட மாட்டார்கள். 

Advertisement

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கட்சி எம்எல்ஏக்களை முதல்வர் சந்திரசேகர ராவ் விலைக்கு வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளனர். கட்சி தாவல் விவகாரத்தால் தெலங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement