This Article is From Dec 11, 2018

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி முகம் : 2-வது இடத்தில் காங்கிரஸ்

தெலங்கானாவில் மிகப்பெரும் வித்தியாசத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை அமைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி முகம் : 2-வது இடத்தில் காங்கிரஸ்

மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் டி.ஆர்.எஸ். கட்சி 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Hyderabad:

தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் மொத்தம் உள்ளள 119 தொகுதிகளில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் முன்னிலை வகித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தெலங்கானா அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரும் கூட்டணியை ஆளும் சந்திர சேகர ராவின் கட்சிக்கு எதிராக அமைத்தது. இங்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. இருப்பினும், இந்த முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, நேற்று திடீர் திடீர் அரசியல் நாடகங்கள் தெலங்கானாவில் நேற்று நடந்தன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தங்களைத்தான் ஆட்சியமைக்க முதலில் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி சார்பாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சமயத்தின்போது, சந்திர சேகர ராவின் கட்சிக்கு எதிராக பாஜக பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் பிரசாரம் மேற்கொண்டது. இதனால் டி.ஆர்.எஸ். கட்சியுடன் பாஜக கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இதற்கிடையே மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாசுதீன் உவைசி டி.ஆர்.எஸ். கட்சி தனது சொந்த பலத்தால் வெற்றி பெறும், இல்லாவிட்டால் அக்கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று கூறியிருந்தார்.

.