This Article is From Nov 22, 2018

காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், தெலுங்கான குருடாகிவிடும்: சந்திர சேகரராவ்

119 தொகுதிகளுக்கான சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற தேர்தல் தெலுங்கானாவில் வரும் டிசம்.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்.11 ஆம் தேதி தொடங்கப்படும்

காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், தெலுங்கான குருடாகிவிடும்: சந்திர சேகரராவ்

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திர சேகர ராவ் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார்.

Hyderabad:

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் கே. சந்திர சேகர ராவ் கூறுகையில் காங்கிரஸ் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்றினால், தெலுங்கானா குருடாகி விடும் என்றார்.

சித்திப்பேட்டை மாவட்டத்திற்கு மின்சாரம் கொடுப்பது குறித்து பேசுகையில், தெலுங்கானா எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அடுத்த இரண்டு வருடங்களில் சித்திப்பேட்டையில் ரயில் சேவை தொடங்கப்பட்டு விடும். மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுவிடும். விவசாயிகளுக்கு 24 மணிநேரம் கட்டணம் இல்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தெலுங்கானவில் ஆட்சியை பிடித்தால், தெலுங்கான குருடாகிவிடும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் உணவு பதப்படும் துறை தொடக்கப்பட்டு, அதனை நிர்வாகிக்கும் பொறுப்பு மகளிர் சங்கத்திடம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு வங்கி கணக்கு புத்தகம் அது தொடர்பான அதிகாரிகள் மூலம் அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்கப்படும். அடுத்த வருடத்திலிருந்து ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ரூ.10,000 வழங்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் உணவு பதப்படுத்தப்படும் துறை தொடக்கப்பட்டு, அதனை நிர்வாகிக்கும் பொறுப்பு மகளிர் சங்கத்திடம் கொடுக்கப்படும்.

மேலும், நாங்கள் லட்சம் வாங்காமல் உழைக்கிறோம் என்று சந்திர சேகர ராவ் கூறினார். தன்னுடைய அரசாங்கம் விவசயிகளுக்கு புதிய திட்டங்களை தொடங்க உள்ளதாக கூறினார்.

தெலுங்கானாவில் வரும் டிசம்.7 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்.11 ஆம் தேதி தொடங்கப்படும்.

.