This Article is From Mar 04, 2020

தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.6000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்திய நிறுவனங்கள்!

பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,042 கோடி செலுத்தியது, ஜியோ ரூ.1,053 கோடியும், வோடாஃபோன் ஐடியா ரூ.1,950 கோடியும் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியது.

தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.6000 கோடி நிலுவைத் தொகையைச் செலுத்திய நிறுவனங்கள்!

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட கடுமையான போட்டி நிறுவனங்களுக்கு பெரும் கடன்சுமையை ஏற்படுத்தியது.

ஹைலைட்ஸ்

  • தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.6,000 கோடியை செலுத்தியது.
  • ஸ்பெக்ட்ரம் கொள்முதலில் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய பணம்
  • கடுமையான போட்டியே நிறுவனங்களுக்கு பெரும் கடனை ஏற்படுத்தியது

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடாஃபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.6,000 கோடி ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகையைத் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதில், பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.3,042 கோடி செலுத்தியுள்ளது, ஜியோ ரூ.1,053 கோடியும், வோடாஃபோன் ஐடியா ரூ.1,950 கோடியும் தொலைத்தொடர்புத் துறைக்குச் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அலைக்கற்றை கொள்முதல் செய்தது தொடர்பாக இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஸ்பெக்ட்ரம் நிலுவைத்தொகையை வழங்குவதற்கு இன்றே கடைசி தினமாகும். இந்த தொகையைச் செலுத்தத் தாமதமாகும் பட்சத்தில் தொலைத்தொடர்புத் துறை வங்கி உத்தரவாதம் அளிக்கும்படி கோரியிருந்தது. 

வோடாஃபோன் நிறுவனம் மொத்தம் ரூ.53,000 கோடி செலுத்த வேண்டும். அதில், ரூ.3,500 கோடி மட்டுமே இதுவரை அந்நிறுவனம் செலுத்தியுள்ளது. 

இதேபோல், பாரதி ஏர்டெல் நிறுவனம் மொத்தம் ரூ.35,000 கோடி செலுத்த வேண்டும். அதில், ரூ.18,000 கோடி மட்டும் செலுத்தியுள்ளது.  

தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட கடுமையான போட்டியே அந்நிறுவனங்களுக்கு இந்த அளவு பெரும் கடன்சுமையை ஏற்படுத்தியது. 

.