தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகா கூட்டணி அமைத்துள்ளது
Hyderabad: தெலங்கானா சட்டசபை தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் பாஜக ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் டி.ஜே.எஸ். ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
அசாசுதீன் உவைசியின் மஜ்லிஸ் கட்சி காங்கிரசுக்கு அதரவு அளித்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிகளை தெலங்கானாவின் ஆன்மிகவாதியும், பாஜகவின் மூத்த தலைவருமான சுவாமி பரிபூரானந்தா விளாசியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், மகா கூட்டணியும் வாக்கு வங்கிகளை குறி வைத்து செயல்படுகின்றன. பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது பாஜக மட்டும்தான்.
பெரும்பான்மை மக்கள் தங்களது உரிமைகளை எந்தக் கட்சி காப்பாற்றும் என்பதை முடிவு செய்து வாக்களிக்க வேண்டும். இதனை சிறுபான்மையினருக்கு எதிரான கருத்தாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
தெலங்கானா ராஷ்டிரிய சமிதியையும், காங்கிரஸின் மகா கூட்டணியையும் மக்கள் நம்ப வேண்டாம். தேர்தலுக்கு பின்னர் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் அவர்கள் அனைவரும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.