This Article is From Oct 30, 2018

தெலங்கானா 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தீபாவளிக்கு முன்பு வெளியாகும்: பாஜக

கடந்த 20-ம்தேதி தெலங்கானாவில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் 38 பேர் இடம்பெற்றுள்ளனர்

தெலங்கானா 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தீபாவளிக்கு முன்பு வெளியாகும்: பாஜக

பாஜக தலைவர் அமித் ஷா கடந்த செப்டம்பரில் தெலங்கானாவில் பிரசாரத்தை தொடங்கினார்.

Hyderabad:

தெலங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது கட்ட பட்டியலை பாஜக தீபாவளிக்கு முன்பாக வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு வரும் டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை கடந்த 20-ம் தேதி பாஜக வெளியிட்டது. இதில் 38 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்ததாக 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தீபாவளிக்கு முன்னதாக வெளியிடுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. இதில் 30-40 வேட்பாளர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் நவம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நவம்பர் 19-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தெலங்கானாவின் மகபூப் நகருக்கு வந்திருந்த பாஜக தலைவர் அமித் ஷா அங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

.