This Article is From Feb 02, 2019

படுகாயங்களுடன் தெலுங்கு டிவி சேனல் தலைவர் உடல் கண்டெடுப்பு

தலையில் படுகாயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் காரின் பின் இருக்கையில் ஜெயராம் சிகுருபதியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

படுகாயங்களுடன் தெலுங்கு டிவி சேனல் தலைவர் உடல் கண்டெடுப்பு

இது விபத்தா அல்லது கொலையா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Krishna district:

உடலில் படுகாயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் எக்ஸ்ப்ரஸ் தெலுங்கு டிவியின் தலைவர் ஜெயராம் சிகுருபதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அய்தாவரம் கிராமத்தல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜெயராமின் தலை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காரின் பின் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் அவரது சடலம் கிடந்தது.

இது விபத்தா அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா என்பது உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் வியாழன் அன்று நடந்துள்ளது. அதற்கு 2 நாட்கள் முன்பாகத்தான் ஜெயராம் தனது வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார்.

விஜயவாடாவுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தனது உறவினர்களுக்கு அவர் தகவல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இன்னொரு நபர் ஜெயராமின் காரை ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது. டிவி சேனல் நடத்தி வந்த ஜெயராம் ஓராண்டுக்கு முன்பு அதனை மூடி விட்டார். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அவர் கடந்த ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.