This Article is From Aug 10, 2018

வலி தரும் போதை பொருள் கொடுத்து வினோத தண்டனை!

தீவிரமான குற்றச்செயல்களுக்கு இது போன்ற தண்டனை வழங்க வேண்டும் என்று சிலரும், இது தவறு என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்

வலி தரும் போதை பொருள் கொடுத்து வினோத தண்டனை!

அமெரிக்கா டென்னிஸி மாகாணத்தை சேர்ந்த பில்லி ஐரிக் என்பவருக்கு, வலி தரும் போதை பொருள் கொடுத்து வினோத தண்டனை வழங்கியுள்ளது டென்னிஸி நீதிமன்றம்.

கடந்த 1985 ஆம் ஆண்டு, அமெரிக்காவைச் சேரந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 59 வயது ஐரிக் என்பவரை, அமெரிக்க நீதிமன்றம் வினோத முறையில் தண்டித்துள்ளது.

மிடாசோலம் எனப்படும் போதை பொருள் கொண்டு, குற்றவாளி தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த போதை பொருள் எடுத்துக் கொள்வதினால், உடல் வலி ஏற்படும். தீவிரமான வலியினால் துடித்து இறந்து போகும் கொடுமையான போதைப் பொருள் தண்டைனையை டென்னிஸி நீதிமன்றம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று, டென்னிஸி நீதிபதி, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மாலை 7.48 மணிக்கு ஐரிக் உயிரிழந்துள்ளார்.

இந்த தண்டனை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும், தீவிரமான குற்றச்செயல்களுக்கு இது போன்ற தண்டனை வழங்க வேண்டும் என்று சிலரும், இது தவறு என்று சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.