நொய்டாவில் உள்ள ராஜினிகாந்தா சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது.
Noida: டெல்லியை அடுத்துள்ள நொய்டாவில் சாலையின் மத்தியில் உள்ள டிவைடர் மீது அப்பிஜே பள்ளியின் பேருந்து மோதியதில் 16 மாணவர்கள் பலத்தகாயம் அடைந்ததால் கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.முதலுதவி செய்த பிறகு மாணவர்கள் வீட்டிற்க்கு அனுப்பபட்டனர். ‘ஓட்டுநர் கங்காசரண் உயிருக்கு ஆபத்தான நிலையில் கைலாஷ் மருத்துவமனையில் உள்ளார், எனவும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடக்கவுள்ளதாகவும்' காவல்துறை அதிகாரி மனோஜ் குமார் பாந்த் தெரிவித்தார்.
சுமார் 30 மாணவர்களுக்கு மேல் காயங்களுடன் உயிர்தப்பிய இந்த சம்பவம் பல செய்தி நிறுவனங்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் அமைந்திருக்கும் செக்டர் 16 பகுதியில் நடந்ததுள்ளது.