அபாயகரமான சூழலில் ஊஞ்சலாடும் காட்சி.
8-வது மாடியில் வைத்து அபாயகரமான சூழலில் தந்தை ஒருவர் தனது மகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார். அவர் வேண்டுமென்றே இதனை செய்தாரா அல்லது அறியாமல் செய்தாரா என்பது தெரியவில்லை. காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெக்சிகோவின் பியூர்டோ ரிகோ நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், மெக்சிகன் ஹெரால்டில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஜானதன் படில்லா என்பவர் இந்த வீடியோவை எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோ 70 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் இந்த வீடியோவுக்கு கமென்ட் செய்துள்னர்.
Just because you cannot go to the park does not mean you can risk your childs life... from r/insaneparents
வீடியோவில், தந்தை ஒருவர் 8-வது மாடியில் வைத்து மகளை ஊஞ்சலாட்டி விடுகிறார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு தரையில் இருந்து சுமார் 80 அடி உயரத்தில் உள்ளது. ஊஞ்சலில் சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், குழந்தை பறந்து வெளியே சென்று விழுந்து விடும். இந்த அபாயத்தை உணராமல் தந்தை செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'உங்களால் பூங்காவுக்கு செல்ல முடியவில்லை என்பதற்காக, குழந்தைகளின் உயிரை பணயம் வைக்காதீர்கள்' என்று ஒருவர் கூறியுள்ளார்.
இன்னொருவர், 'இந்த வீடியோவை பார்த்து நான் மிரண்டு போயுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
'இந்த வீடியோ அடிவயிற்றில் எனக்கு புளியை கரைக்கிறது' என்று ட்விட்டர் பயணம் ஒருவர் தெரிவித்துள்ளார். 'வீட்டிற்கு வெளியே வந்துதான் ஊஞ்சலாட வேண்டுமா? இதனை வீட்டிற்குள் இருந்து செய்ய முடியாதா?' என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Click for more
trending news