பாதுகாப்புக்கான பெல்ட்டுகள் சரிவர வேலை செய்யாததால் மெட்டல் பார் திறக்கப்பட்டது
தாய்லாந்தில் உள்ள லோபுரியில் உள்ள தீம் பார்க் ஒன்றில் ராட்டினத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராட்டினத்தில் ஏறியவர்களில் 5 பேர் தூக்கி எறியப்பட்டனர்.
இந்த சம்பவம் நவம்பர் 30-ம் தேதி நடந்ததாக செய்தி வலைத்தளம் சிஜிடிஎன் தெரிவித்துள்ளது. இந்த ராட்டினத்தில் 14 பேர் சவாரி செய்தனர். ராட்டினத்தில் உள்ள பாதுகாப்புக்கான பெல்ட்டுகள் சரிவர வேலை செய்யாததால் மெட்டல் பார் திறக்கப்பட்டு ஐந்து பேர் ராட்டினத்தில் ஏறியதும் கீழே வீசப்பட்டுள்ளனர்.
ராட்டினத்தை செயல்படுத்துபவர் உடனடியாக நிறுத்தினார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாரும் பலத்த காயமடையவில்லை.
இந்த விபத்திற்கான வீடியோவினை நீங்கள் கீழே காணலாம். வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கீழே விழுந்தவர்களும் காயம் அதிகமின்றி தப்பிவிட்டனர்.
Click for more
trending news