This Article is From Feb 15, 2019

புல்வாமா தாக்குதல்: சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் வாழ்ந்த தீவிரவாதி!

பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ள தீவிரவாதி அடில் அஹமத் காடி தக்ரனேவாலா.

புல்வாமா தாக்குதல்: சம்பவ இடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் வாழ்ந்த தீவிரவாதி!

பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • அடில் அஹமத் கடந்த ஆண்டு ஜெய்ஷ் அமைப்பில் சேர்ந்துள்ளார்
  • பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார் அடில் அஹமத்
  • ஜெய்ஷ் அமைப்பால் அமர்த்தப்பட்ட 3வது உள்ளூர் தீவிரவாதி அடில், போலீஸ் தகவல்
New Delhi:

அடில் அஹமத் தர். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்தான், ஜம்மூ - காஷ்மீர் மாநில புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பத்துக்குக் காரணமான தற்கொலைப் படை தீவிரவாதி. அவர், சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் வசித்து வந்துள்ளார் என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், சி.ஆர்.பி.எப் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினார்.

இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

n8b8vc3s

பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ள இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ள தீவிரவாதி அடில் அஹமத் காடி தக்ரனேவாலா. அவர், ‘வகாஸ் கமாண்டோ குண்டிபாஹ்' என்றும் அழைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்துள்ளார் அடில் அஹமத். 

22 வயதாகும் அடில் அஹம்த், இரு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார். காஷ்மீரின் தெற்கில் இருக்கும் புல்வாமா மாவட்டத்தின் குண்டிபாஹ் கிராமத்தில் அவர் வசித்து வந்துள்ளார். 2017-ல் தீவிரவாத அமைப்பில் ஐக்கியமாகியுள்ளார் அடில் அஹமத். 

நேற்று தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் அடில் அஹமத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அவர் ஒரு வீடியோவில், ‘என் பெயர் அடில் அஹமத். நான் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் ஓராண்டுக்கு முன்னர் சேர்ந்தேன். நான் எதற்காக ஜெய்ஷில் சேர்ந்தேனோ, அதைச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வீடியோ உங்களை வந்து சேரும்போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு இதுவே எனது கடைசி செய்தி' என்று கூறினார். 

o3pm30vg

 

ஜெய்ஷ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டதால், அந்த அமைப்பிலிருந்து ஒருவர் இப்படியொரு தாக்குதலில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும் என்று புலனாய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் குழம்பியுள்ளனர்.

போலீஸ் தரப்பின் தகவல்படி, ‘அடில் அஹமத், உள்ளூரில் ஜெய்ஷ் அமைப்பால் பணிக்கு அமர்த்தப்பட்ட மூன்றாவது தற்கொலைப் படை தீவிரவாதி' என்கிறது. மேலும், ‘இதற்கு முன்னர் இருந்த இரண்டு தற்கொலைப் படை தீவிரவாதிகளும் முறையே 2000 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு ராணுவ வீரர்களையும் கொன்றுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் படிக்க  : ‘மிகப் பெரிய தவறிழைத்துவிட்டார்கள்!'- தீவிரவாதிகளை எச்சரிக்கும் பிரதமர் மோடி

.