This Article is From Nov 04, 2018

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் – தீவிரவாதி சுட்டுக் கொலை

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர் – தீவிரவாதி சுட்டுக் கொலை

தீவிரவாதியிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Srinagar:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள குத்போரா பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோபியானி தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மறைந்திருந்த தீவிரவாதி ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

.