हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 04, 2020

ஆட்டோ பைலட் ஆப்ஷன் கோளாறு; 110 கி.மீ வேகத்தில் சென்ற டெஸ்லா கார் விபத்து!

லாரி கவிழ்ந்து கடப்பதை கண்டவுடன் தானே பிரேக்குகளை அமுக்கியதாகவும், எனினும் விபத்தைத் தவிர்க்க மிகவும் தாமதமானது என்றார்.

Advertisement
விசித்திரம் Posted by

ஆட்டோ பைலட் ஆப்ஷன் கோளாறு; 110 கி.மீ வேகத்தில் சென்ற டெஸ்லா கார் விபத்து!

தைவானில் ஆட்டோ பைலட்டில் தானாகவே இயங்கும் டெஸ்லா ரக கார் ஒன்று திங்கள்கிழமையன்று கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமானது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதுதொடர்பாக தைவான் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் அந்த காரின் ஒட்டுந்தர் ஹூவாங் கூறியதாவது, ஆட்டோ பைலட் மோடில் கார் இயங்கி வந்ததாகவும், விபத்து நடக்கும் நேரத்தில் 110 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த டெஸ்லா மாடல் காரில், சுயமாக காரை ஒட்டும் ஆப்ஷன்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

இரண்டு வகை தொழில்நுட்பத்தில் டெஸ்லா தனது மின்சார கார்களை வழங்கி வருகிறது. அது, ஆட்டோ பைலட் மற்றும் முழுமையாக சுயமாக ஓட்டுதல் ஆகும். இதில், ஆட்டோ பைலட் ரக கார்களில் ஸ்டியரிங், ஆஸ்சிலரேட்டர் மற்றும் பிரேக் உள்ளிட்டவை தானாகவே செயல்படும், மற்ற வாகனங்களக்கும், பாதசாரிகளும் இடையில் வந்தால் கார் தானாகவே நின்றுவிடும் திறன் கொண்டது. முழுமையக சுயமாக ஓட்டும் வசதியில், மேலும் பல வசதிகள் உள்ளன. 

இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள தகவலில், விபத்து ஏற்படுதவற்கு சில விநாடிகளுக்கு முன்பு டெஸ்லா காரின் டயர்களில் இருந்து புகை எழுகிறது. இது தொடர்பாக ஹுவாங் கூறும்போது, லாரி கவிழ்ந்து கடப்பதை கண்டவுடன் தானே பிரேக்குகளை அமுக்கியதாகவும், எனினும் விபத்தைத் தவிர்க்க மிகவும் தாமதமானது என்றார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு எந்த காயமும் இல்லாமல் தப்பிக்க முடிந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

டிவிட்டரில் இந்த வீடியோ 2லட்சத்தற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.  

இந்த விபத்து குறித்து டெஸ்லா நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அந்நிறுவனத்தின் ஓரளவு தானியங்கி வசதிகள் கொண்ட கார்கள் இதற்கு முன்பு பல விபத்துக்களில் சிக்கியுள்ளன. 

Advertisement