This Article is From Aug 22, 2019

TET Results: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம்பேர் தோல்வி! அதிர்ச்சி தகவல்!!

டெட் தேர்வு முடிவு, விடைக்குறிப்பும் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதியவர்களில் 1 சதவீதம்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TET Results: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம்பேர் தோல்வி! அதிர்ச்சி தகவல்!!

2 தாள்களாக டெட் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களில் 99 சதவீதம்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டதாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாளும், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களக்கு வகுப்பு எடுக்கும் மாணவர்களுக்கு இரண்டாவது தாளும் தேர்வு வைக்கப்படுகிறது. 

முதல் தாளை கடந்த ஜூன் 8ம்தேதி ஒரு லட்சத்தி 62 ஆயிரம் பேர் எழுதினர். 2-ம் தாளை சுமார் 3  லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். இந்த நிலையில் டெட் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 

இதில் முதல் மற்றும் இரண்டாவது தாளில் மொத்தமே ஒரு சதவீதம்பேர்தான் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தேர்வு எழுதிய 3 லட்சத்திற்கும் அதிகமானோரில் சுமார் 300 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். 

இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை தேர்வை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. வெளிப்படைத்தன்மையுடன் கலந்தாய்வு நடைபெறும் என்றும், வெகு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Click here for more Jobs News

.