This Article is From Jul 18, 2018

"துளைகள் போட்டு தப்பித்தோம்" குகையில் சிக்கிய தாய்லாந்து மாணவர்கள்

எங்களை மீட்க பிரிட்டிஷ் வீரர்கள் வந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் அதை எதிர்ப்பார்க்கவேயில்லை

Chiang Rai, Thailand:

தாய்லாந்து குகையில் சிக்கிய கால்பந்து அணி வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினர். அவர்களைப் பார்த்த உறவினர்கள் அந்த சிறுவர்களை ஆரத் தழுவி வரவேற்றனர்.

தாய்லாந்து குகையில் 18 நாட்களுக்கு மேல் சிக்கி மீட்கப்பட்ட கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அனைவரும் இன்று வீடு திரும்புகின்றனர். முன்னதாக மருத்துவமனையில் அவர்கள்செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்களிடம் பத்திரிகையாளர்கள் ஏராளமான கேள்விகளை முன்வைத்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், எங்களை மீட்க பிரிட்டிஷ் வீரர்கள் வந்ததை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் அதை எதிர்ப்பார்க்கவேயில்லை. எங்களுக்கு உணவு இல்லாதபோது அங்கு வழிந்து கொண்டிருந்த தண்ணீரை மட்டுமே அருந்திஎங்கள் பசியை தீர்த்துக்கொண்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவர்களில் பலர் நீர்முழ்கி வீரர் ஆக வேண்டும் என்கிற ஆசை வந்திருப்பதாகவும், எங்களை காப்பாற்ற வந்துமரணமடைந்த சமன் தங்களுக்குத் தந்தை போலவும் என்று உருக்கமாகப் பேசினர்.

நாங்கள் உயிரோடு வெளியில் வருவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், எங்களுக்கு இது மிகவும் குற்ற உணர்ச்சியைஅளிக்கிறது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாணவன் கூறுகையில், குகைக்குள் இருக்கும் போது தான் பிரைட் ரைஸ் உண்பது போல கனவு கண்டதாகவும் ஆனால், அதைசாப்பிடமுடியாமல் வெறும் தண்ணீரை குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளான்.

மேலும், பெற்றோரிடம் சொல்லாமல் இதுபோன்று சென்று அவர்களுக்கு

துன்பம் கொடுத்ததற்கு வருந்துவதாகவும் அந்த மாணவர்கள்பத்திரிகையார் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.