Mae Sai, Thailand: டாம் லுவாங் குகைக்குள் 18 நாட்கள் உணவு இல்லாமல் மழைநீர் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்ட, கால்பந்து பயிற்சியாளர்கள் மற்றும் குழு வீரர்கள் மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்பினர்.
தாய்லாந்து: வடக்கு தாய்லாந்தில் உள்ள குகையில் இருந்து காப்பாற்றப்பட்ட "வைல்ட் பர்ஸ்" கால்பந்து அணியின் உறுப்பினர்கள் முதல் நாள் இரவை வீட்டில் செலவிட்ட பிறகு வியாழக்கிழமை காலை பௌத்த ஆலயத்தில் பிராத்தனை செய்தனர்.
18 நாட்கள் உணவு இல்லாமல் மழைநீர் மட்டுமே குடித்து உயிர்வாழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்ட, கால்பந்து பயிற்சியாளர்கள் மற்றும் குழு வீரர்கள் மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்பினர்.
மாலையில் சிறுவர்களுடன் ஒரு கட்டுப்பாடான செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நேற்று ஏற்பாடு செய்திருந்தனர்.
பல நாட்களுக்குப் பிறகு, தங்களது சொந்த வீட்டில் நேற்றைய இரவைக் கழித்த பிறகு சிறுவர்கள் ஒரு விழாவில் கலந்து கொண்டார்கள். இதனையடுத்து, அடுத்த நாள் காலையில் மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள மே சாய்வில் உள்ள வாட் ஃபா தட் டோய் வோவில் அவர்கள் நீண்ட ஆயுளுக்காவும் நல்ல வாழ்க்கைக்காகவும் பிராத்தனை செய்தனர்.
அப்போது, அவர்கள் மீட்பின் போது உயிரிழந்த முன்னாள் தாய் கடற்படை சீல் டைவர் சமன் குணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
"மிஷன் இம்பாசிபிள்" என்று அழைக்கப்பட்ட மற்றுமொரு வெற்றிகரமான நடவடிக்கையில் அவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.
பௌத்த துறவிகளின் அறைக்குள் சிறுவர்கள் வெள்ளை நிற கயிறை கையில் அணிந்து கைகளைக் கோர்த்துக் கொண்டு ஒன்றாக கூடி பிரார்த்தனை செய்தனர்.