This Article is From Jul 10, 2018

தாய்லாந்து குகையில் இருந்து 11 பேர் மீட்பு

இளம் கால்பந்தாட்ட வீரர்கள் குகை வெள்ளத்தில் சிக்கி கொண்ட சம்பவத்தில், 8 பேர் நேற்று வரை மீட்கப்பட்டனர்

தாய்லாந்து குகையில் இருந்து 11 பேர் மீட்பு
Mae Sai, Thailand:

தாய்லாந்து: இளம் கால்பந்தாட்ட வீரர்கள் குகை வெள்ளத்தில் சிக்கி கொண்ட சம்பவத்தில், 8 பேர் நேற்று வரை மீட்கப்பட்டனர். இன்று நடைபெற்ற மீட்பு பணியில், இரண்டு வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் வெளியே கொண்டு செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

மூன்று நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் மீட்பு பணியின் முதல் நாள் நான்கு பேரும், இரண்டாம் நாள் நான்கு பேரும் குகையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டனர். இந்த மீட்புக் குழுவின் தலைமை அதிகாரி நரோங்சக், இந்த இறுதிக்கட்ட மீட்புப்பணி சவாலாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் படி மேலும் ஒருவர் மீட்கப் பட்டு, மொத்தம் 3 பேரை இன்று வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் மீட்புக் குழுவினர். தாய்லாந்து கடற்படையின், திறன் பெற்ற நீச்சல் குழுவினர் 2.5 மைல் (4 கிலோமீட்டர்) தூரத்தை கடந்து சென்று விளையாட்டு வீரர்களை மீட்டுள்ளனர்.

குகை பகுதிகளில் பெய்து வரும் மழையால், நீரின் அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனினும், எதிர்ப்பார்த்த நேரத்தை விடவும் விரைவாக மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன என்று மீட்பு பணி தலைமை நரோங்சக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 23-ம் தேதி, ‘வைல்டு போயர்’ கால்பந்து குழுவை சேர்ந்த 12 இளம் வீரர்களும், பயிற்சியாளரும் குகைக்குள் மாட்டி கொண்டனர். பலத்த மழை பெய்த காரணத்தால், குகைக்குள் நீர் அதிகரித்துள்ளது.

சென்ற வாரம் திங்கட்கிழமை, வீரர்களின் இருப்பிடத்தை பிரிட்டிஷ் மீட்பு குழுவினர் கண்டறிந்தனர். இதுவரையில் மீட்கப்பட்டுள்ள 11 வீரர்களில், இரண்டு பேருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த சம்பவம் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அமெரிக்கா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், வீரர்களை மீட்க உதவ கூடிய சிறிய சப்-மெரைனை தாய்லாந்து மீட்பு குழுவினருக்கு அளித்தார். ஆனால் அதைப் பயன்படுத்தித் தான் சிறுவர்களை மீட்டார்களா என்பதைப் பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

.