This Article is From Jul 10, 2018

மீட்பு பணிகளுக்காக தாய்லாந்து விரைந்தார் தொழிலதிபர் எலான் மஸ்க்

குகை நுழைவு வாயிலிருந்து 1.2 மைல் (2-கி.மீ) தூரத்தில் சிறுவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். இங்கு தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகின்றன

மீட்பு பணிகளுக்காக தாய்லாந்து விரைந்தார் தொழிலதிபர் எலான் மஸ்க்
Washington:

வாஷிங்டன்: அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வடிவமைத்துள்ள சிறிய நீர் மூழ்கி கப்பல் (சப்-மெரைன்), தாய்லாந்து குகையில் மாட்டிகொண்ட வீரர்களை காப்பாற்ற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்ற எலான் மஸ்க், குகையில் மாட்டி கொண்டுள்ள சிறுவர்களை மீட்கும் சிறிய சப்-மெரைன் குறித்த விளக்கங்களை அளித்தார். வெள்ளம் சூழ்ந்த குகையில் தாய்லாந்து மீட்பு பணியாளர்கள் செயல்பட்டு வரும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
 

 

Just got back from Cave 3

A post shared by Elon Musk (@elonmusk) on

குகை நுழைவு வாயிலிருந்து 1.2 மைல் (2-கி.மீ) தூரத்தில் சிறுவர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். இங்கு தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை இரவு, குகையில் மாட்டிகொண்டிருந்த எட்டு கால்பந்து வீரர்களை நீச்சல் திறன் பெற்ற மீட்பு குழுவினர் மீட்டு வந்துள்ளனர். இன்னும், 25 வயதுடைய பயிற்சியாளரும், நான்கு வீரர்களும் குகையில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

ei91tzhsztq

குகைக்குள் மாட்டி கொண்ட சிறுவர்களை பற்றிய செய்தி உலகெங்கும் பரவியதை அடுத்து, மினி சப்மெரைன் மூலம் குகைக்குள் உள்ள சிறுவர்களை மீட்டு வரலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த சிறிய சப்-மெரைன்கள் எடை குறைவாக இருப்பதால், இரண்டு பேர் தூக்கி செல்ல முடியும். மேலும், குறுகிய இடங்களிலும் எடுத்து செல்லும் அளவு சிறியது என மஸ்க் தெரிவித்தார்

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நீச்சல் குளத்தில் சிறிய சப்-மெரைன் சோதனைக்குள்ளாக்கப் பட்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளர். கடந்த வாரம், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் குழுவில் இருந்து மீட்பு குழுவினர்கள் தாய்லாந்து செல்வதாக செய்திகள் வெளியாகின. டெஸ்லா கார் நிறுவனத்தின் துணை நிறுவனரும் எலான் தான் என்பது கூடுதல் தகவல்.

.