This Article is From Jul 30, 2019

‘தல60’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மீண்டும் இணையும் மெகா கூட்டணி!!

ஆக்‌‌ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து உருவாகும் என்றும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்க படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தல60’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மீண்டும் இணையும் மெகா கூட்டணி!!

ஹைலைட்ஸ்

  • இப்படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்க இருக்கிறது
  • ஆக்ஷன் அட்வென்சர் திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது
  • இந்த படத்தையும் எச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்கிறார்

போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இன்னும் பவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கும் இப்படம் ஆகஸ்ட் 8-ம்தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து ‘தல60' படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைந்து புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

ஆக்‌‌ஷன், திரில்லர், அட்வெஞ்சர் ஆகியவை கலந்து உருவாகும் என்றும், பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்க படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இணையவிருக்கும் நடிகர் நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.