This Article is From Feb 01, 2019

அண்ணா பல்கலைகழகம் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பு.

சென்னையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித்தை நியமித்தது.

அண்ணா பல்கலைகழகம் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பு.

ஹைலைட்ஸ்

  • கடந்த ஆண்டு இந்த குழு அமைக்கப்பட்டது.
  • இவர் நடித்த விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
  • அரசியல் தொடர்பான தனது கருத்தை கடிதம் மூலம் தெரிவித்தார்.

சென்னையில் இயங்கும் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித்தை நியமித்தது.

அந்த குழுவின் ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகர் மற்றும் விமானியாக அஜித் கடந்த 10 மாத காலம் பணியாற்றினார்.

அஜித்தின் ஆலோசனையின் கீழ் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஆளில்லா விமானங்களை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பான போட்டியில் பங்கேற்று 2-ம் இடம்பிடித்தது.

சமீபத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆளில்லா ஏர் டேக்சியும் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தக்‌ஷா குழுவுக்கு அளித்த பங்களிப்புக்காக அஜித் குமாருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது..

.