''நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை'' என்று நடிகர் அஜித் குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
திருப்பூரில் இளைஞர்கள் சிலர் பாஜகவில் இணைந்துள்ளனர். அவர்கள் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இணைப்பு விழாவில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், திரைப்பட கலைஞர்களில் அஜித் நேர்மையானவ்ர் என்றும், தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர் என்றும் கூறினார்,
தொடர்ந்து பேசிய தமிழிசை, அஜித் ரசிர்களும் நல்லவர்கள்தான். அவர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜகவினர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அஜித்குமார் பரபரப்பான அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறார். அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது-
எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை. ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல். நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன்.
நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசயில் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவே இங்கு வரவில்லை. என் ரசிர்களுக்கும் அதேயேதான் நான் வலியுறத்தியிருக்கிறேன்.
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க - "பி.ஜே.பி வலையில் சிக்குகிறாரா தூக்குதுரை?"