தனது ரசிகர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நடிகர் அஜித் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
திருப்பூரில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த விழாவில் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை, அஜித் நல்லவர் என்றும், அவர் மக்களுக்கு நல்லது செய்ய விரும்பவுதாகவும் கூறியுள்ளார்.
அவரது வழியில் ரசிகர்களும் செயல்பட வேண்டும், மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியதாக தகவல்கள் பரவின. இதனால் அஜித்தையும், பாஜகவையும் இணைத்து செய்திகள் பரவத் தொடங்கின. இந்த நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்றும், அதில் தனக்கு விருப்பு வெறுப்புகள் உள்ளதாகவும் கூறினார். தனது அரசியலை நிலைப்பாட்டை ரசிகர்களிடம் திணிப்பதில்லை என்றும் கூறியுயார். அறிக்கையில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது-
எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு பரஸ்பரம் மரியாதை செலுத்துவது ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செலுத்தும் அன்பு. ''வாழு வாழுவிடு''
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ''நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ வரவில்லை'' - நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை