This Article is From Jun 12, 2019

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ட்ரெய்லர் வெளியானது! ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியில் வெளியான பிங்க் படம் தமிழ் ரீமேக்காக 'நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ட்ரெய்லர் வெளியானது! ரசிகர்கள் கொண்டாட்டம்

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களின் இயக்குனர் எச்.வினோத், நேர் கொண்ட பார்வையை இயக்குகிறார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. விஸ்வாசம் நல்ல வரவேற்பும், வசூல்  வேட்டையும் பெற்ற நிலையில் நேர்கொண்ட பார்வை படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியிருந்தது. 

முன்னதாக ட்விட்டரில் #NerKondaPaarvaiTrailer என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. படத்தின் போஸ்டரை அதன் தயாரிப்பாளரான போனி கபூர் (நடிகை ஸ்ரீதேவியின் கணவர்) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காத்திருந்ததெல்லாம் போதும். இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வையின் டீசர் என்று போனி தனது ஸ்டேட்டஸில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் சரியாக மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேர்கொண்ட பார்வை ட்ரெண்டாகி வருகிறது.

படம் ஆகஸ்ட் 10-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச்.வினோத் நேர்கொண்ட பார்வையை இயக்குகிறார். அஜித்துடன் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

.